கண்ணின் அவா அழகிய
பெண்ணென்றால்,நம்மை
மெய்மறக்க செய்ய,விழிகள்
செய்யும் சூழ்ச்சித்தானே அது..
கண்ணால் உந்தப்பட்ட நமது உடலுக்கும் அவாக்கள் வரும்
அது பேரவா ஆகும் போது உன் பேரல்லவா அசிங்கப்படும்..
நாவின் அவா அறுசுவையை
ருசிப்பதென்றால்,பசியின் சொல்
கேட்டு,நயமுற பேச மறுப்பது
நமக்கு பெரும் வீழ்ச்சி தானே
நாசியின் அவா தினந்தோறும்
நறுமணம் என்றால்,நாறிடும்
புழக்கடையை,கழிவறையை
கழுவிட யார் முன் முன்வருவர்?
செவியின் அவா புறம்சொல்
கேட்பதென்றால்,போதனையை
வேதனையாய் தான் கேட்டிடுவர்
காதிரெண்டையும் பூட்டிடுவர்..
புலனைந்தையும் அடக்கிட்டால்
பெரும்பலனை பெற்றிடலாம்
சான்றோர்கள் சொன்னதை
மறவாமல் கேட்டிடுவோம்..
அவாவின்மை தான் மனித
வாழ்க்கையை தூய்மை
படுத்தும் என்று சொல்ல
நாம் புத்தன் இல்லையே...
நேர்மையான அவாக்களை
தரவேண்டி,எல்லாம் வல்ல இறைவனிடம்,அனுதினமும்
துவாக்கள் செய்திடுவோம்...
No comments:
Post a Comment