பெண்ணையும்,உன்னையும்
கண்ணையும் படைத்தவன்
அவனே.அன்னையும் பெண்
தான் என்று,பகுத்தறியும்
சிந்தை தந்தவனும் அவனே..
தந்தை வயதை அடைந்தவன்
கொண்டவளை மறந்து,தன்
அருகில் கண்டவளை,வந்தவளை
அடைய துடித்த காரணத்தால்
பாடம் படித்த கதைகள் பல உண்டு..
ஆனாலும் மாறவில்லை மானிடன்..
மண்ணடியின் வேந்தன் ஒருவன்
பெண்ணடிமையானதும், கவிராஜன்
ஒருவன்,காமராஜன் ஆனதும்
பேசும் பொருள் ஆனது இன்று...
ஆசிரமம் நடத்தும் சாமிகள்,ஒரு
சிரமமும் இல்லாமல்,கடவுளை
பற்றி எண்ணாமல், நம்பி வந்த அபலைகளை,
சபலத்திற்கு பயன்படுத்தி, கபட நாடகம் ஆடிய
சம்பவங்கள் பல உண்டு...
பாதிக்கபட்டு,வாழ்க்கையில் சோதிக்க
பட்ட பல மலர்கள் வாடியும்,ஓடியும்
போனது.ஆனால் சில பூக்கள் இன்று
புயலானது.காமுகனை எரிக்கும்
கனலானது,போராடும் குணமானது
"Mee too" மூலம் வெளியானது...
பெண்ணவள், தான் பட்டதுயரை,
வெட்ட வெளிச்சமாக்க,திட்டமிட்ட
இந்த இயக்கத்தை,தூற்றுபவர்கள்
பலருண்டு..ஆனால் நான்
போற்றுகிறேன்..வாழ்த்துகிறேன்..
No comments:
Post a Comment