முத்து தீவாம் பஹ்ரைன்
நோக்கி,வெண்முகிலை கிழித்துக்
கொண்டு,வானூர்தி பறந்திட
சன்னலோரம் அமர்ந்திருந்த
எனக்கு வந்த சிந்தனை இது
அடுத்த வீட்டு அக்காவின்
தோட்டத்து பலாமரத்தில்
கைக்கு எட்டா உயரத்தில்
கிளைகளில் பாலாப்பழங்கள்..
அதை கொடிப்பலா என்றனர்..
சில பழங்கள் கனிந்தன..
துணிந்தன,தானே தரையில்
விழுந்தன.பட்ட அடியோடும்
வலியோடும்,மரத்தை விட்டு
தன்னந்தனியாய் உருண்டன..
மரமென்ற நாட்டையும்,கிளை
என்ற வீட்டையும்,பொருளைத்
தேடி,கனத்த நெஞ்சோடு பிரிந்து
வெளிநாடு வந்தவர் எல்லாம்
கொடிப்பலாக்கள் தான்..
வாய்ப்புகள் வருமென்றால்
வழிகள் உண்டென்றால்
வலிகள் இல்லாமல்,தாய்
நாட்டில்,மகிழ்வாய் வாழ்ந்திட
அனைவருக்கும் ஆசைதான்..
மரத்தின் கீழே,வேரைச்சுற்றி
காய்திடும், வேர்ப்பலாவிற்கு
கிட்டிய பாக்கியத்தை,இறைவா
கொடிப்பலாகளுக்கு தருவாயா??
No comments:
Post a Comment