Monday, 14 May 2018

அன்னையர் தினம்


தாய்ப்பாலை தந்தென்னை
தன்னுயிராய் வளர்த்த அன்னை 
அன்பாலே வென்றென்னை
அனுதினமும் காத்த அன்னை

நொடிப்பொழுதும் இமைக்காது 
தன் மடிமீது வைத்தென்னை 
பூப்போல வளர்த்த அன்னை

வருத்தி உன்னை,செதுக்கி என்னை,நல்லவனாய்
வல்லவனாய் ஆக்க முயன்ற 
என்னருமை அம்மாவே ..

மன்னித்து விடு என்னை
நான் வல்லவன் இல்லை.. 
ஆனால் நல்லவனாய்,நீ
காட்டிய வழி நடந்து ,உன் 
மகன் என பெயர் எடுப்பேன்..

உலகில் வாழ்ந்து மறைந்தாலும்
இறைவனிடம்  சென்று
நீ மறைந்து வாழ்ந்தாலும்  
எங்கள் உறைவிடம் உனது
இதயம் தானே தாயே..

No comments:

Post a Comment