Monday, 28 May 2018

பொறுத்தார் பூமி ஆள்வார்


மண் மணக்க கோடை மழை
பெய்ய, ஆர்வமாய் வீட்டின்
கொல்லைப்புரம் சென்றேன்

அங்கு மரமொன்றில் பச்சை
இலைகளுக்கு மத்தியில
மஞ்சள் நிற காய்ந்த இலைகள்..

மழை வருமென்ற நம்பிக்கை
இழந்த, சஞ்சலப்பட்ட,மனம்
தளர்ந்த இலைகள் அவை..

பாவம் மழை வந்தபோது
அதன் துளிகளோடு நிலத்தில்
விழுந்து சகதியாய் போனது..

பொறுத்தார் பூமி ஆள்வார்
என்ற பழமொழி ஏனோ என்
நினைவில் வந்து போனது..

1 comment: