இரவும் முடிகிறது
காலை விடிகிறது..
நாளும் புலர்கிறது
நாலும் புரிகிறது
நேரம் ஓடுகிறது
வயதும் கூடுகிறது;
வேகம் தனிகிறது(சிலருக்கு)
ரோகம் வருகிறது
கோபம் குளிர்கிறது
விவேகம் துளிர்கிறது
அறிவு விரிகிறது
அன்பும் மலர்கிறது,
பரிவு பிறக்கிறது
பிரிவு தகிக்கிறது..
காலத்தின் ஓட்டத்தில்
வரும், தடுமாற்றம் இல்லா
மனமாற்றம், ஏற்புடையதே
காலம் காலமாகட்டும்..
அது மரணித்தால்
கவலை இல்லை..
No comments:
Post a Comment