Tuesday, 1 May 2018

அக்கினி நட்சத்திரத்தின் மூர்க்கத்தையும்,கத்திரி


அக்கினி நட்சத்திரத்தின் மூர்க்கத்தையும்,கத்திரி
வெயிலின் உக்கிரத்தையும்
அனுபவித்து (வியக்க அல்ல)
வியர்க்க,விடுமுறையில்
இன்று தாயகம் செல்கிறேன் ..

மின்வெட்டு இல்லா நற்பொழுதை 
எடப்பாடியார் தருவாரா?இல்லை
மக்களின் சாபத்தை,கோடையில் 
முற்றிலுமாய் பெறுவாரா??

பூவிரியும் சோலையாம் எங்கள் 
டெல்டா மண்ணிற்கு காவிரியும்
கணக்கு பார்த்தே வருமாம்..

பச்சை பூமி,எங்கள் தஞ்சை பூமி,இன்று பஞ்சை பூமியாய்..

சோழ நாடு சோறுடைத்து என்ற 
நிலை மாறி,வாழ வழி இன்றி
மாரடைத்து விவாயிகள்
மரிக்கின்ற அவல நிலை ..

உழைக்கும் மக்களை கண்டால்
மழைக்கும் பிடிக்கும். இறை
அருளால் நிச்சயம் சுபிச்சம் 
வரும்..காத்திருப்போம்..

No comments:

Post a Comment