மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டும்"
----------------------------------
அம்மா! அவளே என் உயிர்
உதிரம்,மூச்சு,உலகம்..
அக்கா! அவளே என் பலம்,
உரம்,தோழி,வழிகாட்டி..
தங்கை! அவளே என்
வசந்தம்,பிள்ளை,ஆதரவு ..
பெண்கள் இல்லா உலகம்
அழகில்லை,அவசியமும்
இல்லை,சாத்தியமில்லை..
தாயாய்,சகோதரியாய்
மகளாய்,மருமகளாய்
தோழியாய்,மனைவியாய்
நலம் விரும்பியாய்,ஆண்கள்
வாழ்வில் என்றும் நீக்கமற
நிறைந்துள்ள,மாதர்குல
மாணிக்கங்களுக்கு,என்
மகளிர் தின வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment