பெரியாரின் கம்பீர சிலை,
ஓய்வெடுக்க வந்தமரும்
காக்கைகள்,எச்சம் கழித்து
விட்டு,உணவிற்கு பறக்கும்..
எச்சில் இலைக்கும்,செத்த
எலிக்கும் பறக்கும் காக்கை
மீது,யாருக்கும் சினம் இல்லை
அதன் குணம் அப்படி தான்..
அச்சில் தன் பெயர் வர,சில
எச்சக்கலைகள் ஏதும்
செய்யும்,மாபாதக சூதும்
செய்யும் வெட்கமின்றி..
வசைபாடும் இப்பிறவிகளால்
பகுத்தறிவு பகலவனுக்கு
இழுக்குமில்லை,எதிர் வினை
செய்ய நமக்கு பழக்கமுமில்லை
No comments:
Post a Comment