அரும்ப காத்திருந்த உயிரை..
தளிரை,தன் கருவறையில்
சுமந்து வந்தவளை,காமராஜன்
கல்லறைக்கு அனுப்பிவிட்டான்
கர்மவீரரின் பெயரை உனக்கு
தவறாய் சூட்டியவன் யாரோ?
எமராஜன் தானே உனக்கு
பொருந்தும் சரியான பெயர்..
மனிதம் மறந்து,மதி இழந்து,
காலனாய் மாறிய காவலனை
கண்டித்த மனிதர்கள் மீது
தடியடியாம் திருவெறும்பூரில்..
பெண்ணரசி உஷாவே!இன்று
மகளிர் தினமாம்.எட்டி உதைத்து,
எட்டா உயரத்திற்கு,உன்னை
அனுப்பிவிட்டோம்.மன்னித்துவிடு..
வெட்கத்தில்,மகளிர் தினத்தில்
வாழ்த்து சொல்ல,வழி இன்றி
தவிக்கின்றேன். மன்னியுங்கள்
மாதர்குல மாணிக்கங்களே!!
No comments:
Post a Comment