கல்யாணத்துக்கு முன்னாடி
பேச்சலரா(bachelor)
இருந்தீக,வியக்கும்
பேச்சாளரா கவர்ந்தீக ..
பொண்டாட்டி வந்த
பின் பேச்சில்லாதவரா
போனதேனோ?மௌன
சாமியாய் ஆனதேனோ?
மீனே,தேனே,மானேன்னு
அப்பெல்லாம் தோழியிடம்
கதைப்பீக,காதலிக்கு
கவியெல்லாம் படைப்பீக..
இப்பெல்லாம் மாறிட்டீக
என்னாச்சி என கேட்டால்
பெண்ணாட்சி என்கிறீக
தன்னாட்சி போனதன்
அத்தாட்சி என்கிறீக..
உன்னாட்சி,என்னாட்சி என்ற
கர்வம் மறந்து,நம்மாட்சி
இதுவென்றால் ,குடும்பம்
கோலோச்சி நிற்குமாம்..
பெரியவங்க சொல்லுறாக..
No comments:
Post a Comment