Thursday, 11 January 2018

ஆரூரில் சங்கமிப்போம்...

''Bad  laws are the worst sort 
of tyranny ''என்று சொல்லுவார்கள் 
தவறான சட்டங்கள் மக்களை
பயமுறுத்தி தண்டிப்பதோடு,
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் 
தலைவர்களை சர்வாதிகார 
மனோ நிலைக்கு இட்டு செல்லும்.
அதோடு அவர்களை சார்ந்தவர்களும்
சட்டத்தை கையில் எடுத்து கொண்டு 
ஆடும் நிலை ஏற்படலாம்..

பசுவதை குறித்த சட்டத்தை 
வைத்து சில கும்பல்கள் 
முஸ்லீம்களை அடித்து 
கொன்ற போது சட்டமானது 
மிக மெதுவாக தான் தன்
கடமையை செய்தது.அதனால் குற்றவாளிகள் பயமின்றி
மீண்டும் அது போன்ற இழி 
செயலில் ஈடுபட்டார்கள்.அது 
இப்போதும் தொடர்கிறது..

இன்றைய  பிஜேபி அரசானது
முத்தலாக் குறித்து கொண்டு
வரும் சட்ட திருத்தத்தில் பிரிவு 
4 லின் படி, முத்தலாக் கூறும் ஒருவரை 3 ஆண்டுகள் சிறையில் தள்ள முடியும்.பிரிவு 7 இன் படி 
பிடியானையின்றி பிணையில் 
வெளி வர முடியாத குற்றமாக 
(cognizable &non -bailable 
offence )அது கருதப்படும்.
அதனால் மனைவி நேரடியாக
கணவனை குற்றப்படுத்த 
வில்லை என்றாலும் கூட ,சிலர் 
சொல்வதின் அடிப்படையில்
போலீசார் கணவனை கைது
செய்ய முடியும்.சிறையில் 
இருந்தாலும் குடும்ப பராமரிப்பு 
செலவுகளை அவன் தான் ஏற்கவேண்டும் என்றும் 
இந்த  சட்டம் சொல்லுகிறது.
இது சாத்தியமா?

பசு கறியை சமைத்ததாக 
குற்றம் சுமத்தி,சில கும்பல்கள் முஸ்லீம் மக்களை துரத்தி 
அடித்து கொன்றதை போன்றே 
இந்த சட்டத்தை பயன்படுத்தி 
முஸ்லீம்களை துன்புறுத்த 
ஹிந்துத்வ அமைப்புக்களுக்கு 
இந்த சட்டம் வழி வகுக்கும்.
அதுவே கூட இந்த பாசிச அரசின் நோக்கமாக இருக்கலாம்.

முத்தலாக் சொல்லி உடன் 
விவாக விடுதலை பெறுவதை 
இஸ்லாம் போதிக்கவில்லை
என்பதை திருக்குர்ஆன் 
தெளிவாக கூறியுள்ளதாக 
மார்க்க வல்லுநர்கள் தெளிவாக 
ஆதாரத்தோடு சொல்லுகிறார்கள்.

லோக்சபாவில் மக்களால் 
நேரடியாக தேந்தேடுக்கபட்ட 
ஒற்றை முஸ்லீம் உறுப்பினர் 
கூட  இல்லாத பிஜேபி அரசு,
தனது மிருக பலத்தை கொண்டு
முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு
சட்டம் என்ற இந்த குறைபாடுகள் 
உள்ள சட்டத்தை கொண்டு வர
அவசர கதியில்  முற்படுவது,
இறை தந்த ஷரியத் சட்டத்தில்
கை வைப்பதற்கான முயற்சியே.
சிறுபான்மையினர் மீது அவர்கள் 
காட்டும் வெறுப்பு அரசியலையே
இது தெளிவாக காட்டுகிறது..

நடுவண் அரசின் இந்த சட்ட 
திருத்தத்தை கண்டித்து 
இஸ்லாமிய சமுதாயம் 
ஒன்று திரண்டு நமது கண்டனத்தை 
பதிவு செய்ய  வேண்டிய 
சரியான தருணம் இது..

இன்று திருவாரூரில் நடக்கும்
கண்டன  கூட்டத்தில் நமது 
மாச்சரியங்களை மறந்து 
ஒன்றிணைவோம்!!நமது 
உரிமையை மீட்டெடுப்போம்!!

No comments:

Post a Comment