Thursday, 11 January 2018

புத்தாண்டு வாழ்த்துக்கள்.!!


முகரத்தில் வெண்மதி ஒளியில்
தொடங்கும்,ஒளிர் மிகு ஆண்டை  
உயர் வழியாம் தீன் வழி நிற்கும் 
மாந்தர்கள் புத்தாண்டு என்பர்..

அகரத்தில் தொடங்கும்,தேன் 
மொழியாம் தமிழ் மொழியை 
தாய் மொழியாய் கொண்டோர் 
'தை'தான் புத்தாண்டு என்பர் 

அகிலத்தில் செங்கதிரோன் 
அசைவில்,சனவரி முதல் நாள்
தொடங்கும்,கிரிகோரி ஆண்டை 
மேற்கத்தியர் புத்தாண்டு என்பர்..

எவ்வழியானாலும் அவ்வழியில் 
நல்வழி நின்று  புத்தாண்டை கொண்டாடும் என்மக்களுக்கு  
நன்மக்களுக்கு வாழ்த்துக்கள் ..

இப்புத்தாண்டு சத்தான,முத்தான ஆண்டாய் அனைவருக்கும்
அமைந்திட ,வல்ல இறைவனிடம் 
கையேந்தி பிரார்த்திக்கிறேன்...

No comments:

Post a Comment