Thursday, 11 January 2018

​ பிரிவினை வேண்டாமே!!


சுன்னத் ஜமாத்,ஷியாக்களை
பார்த்து முஸ்லீம் இல்லை
என்று சொல்ல,ஷியாக்கள்
சூபிக்களை குற்றம் சாட்டுவர்..
சூபிக்கள் சலாபிகளை போலி
என்று கைகாட்ட, அவர்களோ
வாஹாபிகள் போலி என்பர்.
வஹாபிகளை வழிகெட்ட
கூட்டம் என்று சிலர் சொல்ல,
தெருமுனை கூட்டத்தில், நீ
விவாதிக்க வரியா? என்று
கித்தாப்புகளுடன் காத்திருப்பர்..
அஹமதியாக்களை நிந்திக்கும்
ஒரு கூட்டம்,வேறொரு இடத்தில
இஸ்மாயிலிகளிடம் அடங்கா
சினத்தை காட்டும் மறு கூட்டம்...
காரிஜிய்யாக்கள்.ஜாகிரிகள்
முஜாஹிரி,ஜாக்,தப்லீக்கு
என்றெல்லாம் சிதறி போனது
நம்பிக்கையாளர் கூட்டம் ..
பெரியவன்,நானா?நீயா??
நாமே அடித்துக்கொள்ளும்
(கொல்லும்)மோதலில்
அல்லாஹுவே பெரியவன்
என்பதை மறந்துவிட்டோம்..
பிரிந்து கிடக்கும் நம்மை
அறிந்து கொண்டு,அடக்கி
ஆள ஒரு கூட்டம் துடிக்கிறது..
அவர்கள் கொடியே இன்று
நாடெங்கும் பறக்கிறது ..

No comments:

Post a Comment