Thursday, 11 January 2018

​ கங்கையை கொச்சை படுத்த வேண்டாம்..!!



பொன்னார் சொன்னார்
அவர் கட்சி கங்கையை
போலாம்,அதில் மூழ்கி
எழுந்தால் புண்ணியமாம் ...
1992 டிசம்பர் ஆறு,ஒரு
சின்னத்தை இடித்து,அங்கு
கோவிலை கட்ட முனைந்தது
ஒரு கூட்டம்,தேசமே ரத்த
வெள்ளத்ததில் நனைந்தது..
மாட்டுக்கறி உண்டதாய்
சொல்லி,வீட்டுத்தலைவனை
கொன்னதே ஒரு கூட்டம்..
பெருநாளைக்கு புத்தாடை
வாங்க சென்றவனை,புகை
வண்டியில் ரத்த ஆடை
அணிவித்து மேலோகம்
அனுப்பியது ஒரு கூட்டம்
அதிகாரத்தில் உள்ள 'ஷா'வை,
விசாரித்த ஒரு நீதிபதியின்
மர்ம சாவை மறைக்க
முயன்றது ஒரு கூட்டம்...
இஸ்லாமியனை எரித்து
கொன்ற,ராஜஸ்தானின்
காட்டுமிராண்டி காட்டிய
காணொளியை கண்டு
மகிழ்ந்தது ஒரு கூட்டம்...
கொள்கையை விமர்சித்த
லங்கேஷை,பெண்ணென்றும்
பாராமல்,துப்பாக்கியால்
துளைத்ததே ஒரு கூட்டம்..
இக்கூட்டமெல்லாம் புனித
கங்கையில் முங்கி முக்தி
பெற்றவர்களா? ஆளுவது
அவர்கள் கட்சி என்பதால்
சக்தி பெற்றவர்களா??
கங்கையை கொச்சை
படுத்த வேண்டாம்
பொன்னார் அவர்களே..

No comments:

Post a Comment