இதயம் சொந்தங்களை,தன்
பந்தங்களை வறியவனாயினும்
ஒன்றாய் பார்க்கும்..அறிவோ
பொருள் படைத்தவனை
அனுசரணையாய் நோக்கும்..
உலகில் இதயம் சொல்படி
கேட்பவரும் உண்டு,அறிவு
சொல்படி நடப்பவரும் உண்டு..
இதயத்தால் உறவை
வென்றவர்களை விட
அறிவால் உறவை
கொன்றவர்கள் அதிகம்..
ஒருதாய் மக்களை கூட
சில உறவுகள், பண
வரவுகளை கணக்கிட்டு
உதாசீனம் செய்வதுண்டு ..
பணத்தால் குணத்தை
வெல்ல முடியுமா?மரணித்த
பிணத்தால் தனத்தை(செல்வம்)
அள்ள முடியுமா?உன்
ஆணவத்தால் சுவனம்
தான் செல்ல முடியுமா??
பொருள் உன்னை கரை
சேர்க்குமா?இல்லை இறை
அருள் உன்னை கரை
சேர்க்குமா? சிந்தித்து
செயல் படு என் தோழா
No comments:
Post a Comment