தாய்மைக்கு,தூய்மைக்கு
யாரென்றேன்,தாய் என்றனர்.
வாய்மைக்கு பொருள்
கேட்டேன்,தந்தை என்றனர்;
அறிவுக்கு ஆசான் என்றனர்;
எளிமைக்கு தோழன் என்றனர்;
வலிமைக்கு உறவு என்றனர்;
அழகுக்கு பிள்ளை என்றனர்....
அனைத்துக்கும் யாரென்றேன்,
யாரஸூலல்லாஹ் உம்மை
தவிர வெறு யாரென்றனர்..
எம்மை சீர் படுத்த,நேர் படுத்த வந்தவரே; இறை வாக்காம்
அருள் மறையை எங்களுக்கு முழுமையாய் தந்தவரே;
அளப்பரிய பாசத்தை,நேசத்தை
எங்கள் மீது கொண்டவரே..
வற்றிய பாலை நிலத்தில்
சோலையாய் நீங்கள் வந்துதித்த
இந்த புனித தினத்தில்,உம்மை எங்களுக்கு அருட்கொடையாய்
தந்த வல்ல அல்லாஹுவிற்கு எங்களது இதயத்து நன்றி...
யா நபி ஸலாமு அலைக்கும்..
யா ரசூல் ஸலாமு அலைக்கும்..
யா ஹபீப் ஸலாமு அலைக்கும் ..
No comments:
Post a Comment