புத்தர் முக்திக்கு வேண்டி
யசோதராவை மறந்தார்...
இவர் சக்திக்கு(பதவி)வேண்டி
யசோதாபென்னை மறந்தார்..
புத்தர் ஆசையை துறந்தார்
இவர் ஆசையாய்(உலகெல்லாம்)
பறந்தார்...
புத்தர் போதி மர நிழலில்
ஞானம்பெற்றார்,இவர்
ஜாதி மத பிரிவில் (ஆட்சி)
பீடம் பெற்றார்..
புத்தரால் பலர் ஒளியினை
கண்டனர்,இவரால் பலர்
வலியினை கண்டனர்..
சித்தார்தனை புத்தராய்
சரித்திரம் ஏற்றது..
நரேந்திரனை,அவர் புத்தரா
இல்லை எத்தரா என்பதை
வருங்கால வரலாறு
முடிவு செய்யட்டும் ...
உம்மை புத்தராய் போற்றிடும்
காவி பக்தர்களை ஏவி,மத
நல்லிணக்க உணர்வை
தேசமெங்கும் தூவிடுங்கள்..
நாங்களும் உம்மை
புத்தராய் போற்றிடுவோம்...
No comments:
Post a Comment