Sunday, 26 November 2017


அதிகாரத்தின் உச்சியில்   
இருப்பவரின் வலக்கரம்.. 
வரு'ஷா' வருஷம்,பெரு'ஷா'
வளரும் பிம்பம்,அரசியலில் 
தவிர்க்க இயலா ஒரு பூகம்பம்..

பிரித்தாளும் சூழ்ச்சியால் 
வாக்கை அள்ளும் இவர் மீது 
ஷேக்கை(ஷொராபுதீன்) 
மேலோகம் அனுப்பியதாக 
இப்பூலோகத்தில் குற்றச்சாட்டு..

விசாரித்த நீதியரசர் இடையில் 
மாற்றப்பட,வேறொருவர் 
மர்மமாய் மரணிக்க,செய்தி 
சர்ச்சையானது.நடு நிலை 
நாளேடுகள் மூர்ச்சையானது..

நல்லதை நாடறியச்செய்து
தீயதை சுட்டி,நக்கீரனாய்
நெற்றி கண்ணை காட்டிடும்
ஊடகங்கள் ஊமையானதேன்?

இக்கேள்விக்கு என்ன பதில்?
உச்சத்தில் இருப்பவரை கண்டு 
அச்சமா? யாமறியோம்..

No comments:

Post a Comment