Sunday, 19 November 2017

படம் வரைந்து பாடம் நடத்தியவன்.


இருப்பதை மறந்து,இல்லாததற்கு
ஏங்கி,எதிர்ப்பார்ப்பை வளர்த்து,
மன உளைச்சலோடு,ஏமாற்றத்திற்கு 
ஆளாவர் அறியாமையில் சிலர்

இல்லாததை கூட இருப்பதாய் 
ஏற்று,மகிழும் மனோ நிலை 
புத்தருக்கும் சித்தருக்கும் 
இருக்கும்; வியப்பில்லை;இந்த 
சிறுவனுக்கும் வந்து விட்டதே..

பாதிக்காலே இருந்தாலும் 
மீதிக்கால் இல்லையே என்று
வருந்தாமல்,இருப்பதாய்  
உணர்ந்து,அதனை வரைந்து,
மகிழ்ந்த இந்த  சிறுவனை 
கண்டு உறைந்து போனேன்...

உயரிய சிந்தனையை உன்னில் 
வளர்த்துக்கொள் என்பது 
சான்றோர் வாக்கு.அதன் பொருள் 
எண்ணங்களின் தரத்தை உயர்த்தி 
எளிமையாய் வாழ்ந்திடு என்பதே

நம் எண்ணங்களால் தான் 
நம்  உயரம் அளக்கப்படுகிறது
என்பதை,இச்சிறுவன்,
.ஒரு சிறு படத்தை வரைந்து,பெரும் 
பாடத்தை நடத்தி விட்டான்!!

No comments:

Post a Comment