Tuesday, 17 October 2017

நன்றாய் இருப்பாய்..!! நலமாய் இருப்பாய்..!!

நன்றாய் இருப்பாய்..!!
நலமாய் இருப்பாய்..!!
----------------------------

துயிலினை துறந்து 
உதயத்தில் எழுந்து,
தினசரி நடந்து,உன் 
இதயத்தை கவனி..

புலாலை குறைத்து,
நன்றாய் மென்று,
அளவாய் தின்று,உன் 
எடையினை கவனி..

மதுவினை விடுத்து
மதியினை பெருக்கி
உன் ஈரலை கவனி..
  
புகையினை தடுத்து,
மூச்சினை பெருக்கி 
நுரையீரலை கவனி..

கவலையை மிதித்து
பகையினை சகித்து 
உன் மனதினை கவனி ..

பிற உயிரினை மதித்து
இறைவனை நினைத்து 
வாழ்க்கையை கவனி..

வல்லவன் அருளோடு 
நன்றாய் இருப்பாய்..
நலமாய் இருப்பாய்..

No comments:

Post a Comment