ராசா கைய்ய வச்சா,அது
ராங்கா போனதில்லை
அது நம்ம இளைய ராசா..
ராசா வாய விட்டா,அது
ரைட்டா போனதில்லை
அது நம்ம காவி ராசா
ஓட்டை பொறுக்க,
நாட்டை பிளக்கும்
ஆண்டிகளின் ராசா...
கூசாமல் பொய் பேசி
டெல்லிக்கு கூசா தூக்கும்
விஷம் கக்கும் ராசாவே..
மனிதனிடம் மதத்தை தேடி,
மலத்தில் கைவைப்பது,உன்
வேடிக்கையான வாடிக்கை
வஞ்ச மனம் கொண்டவனின்
நெஞ்சில் கூட,கொஞ்சம்
ஈரமுண்டு..நீ அறிவாயா??
'மதம்'பிடித்த யானை
பாகனேயே கொல்லும்..
உன் 'மத' வெறியால்,யாரை
எல்லாம் நீ வதைப்பாயோ?
குறிப்பு: யாரையெல்லாம்
கொல்வாயோ? என்று எழுத
நினைத்தேன்,அது நாகரீகமல்ல
என்பதால்,வதைப்பாயோ
என்று மாற்றி எழுதியுள்ளேன்..
No comments:
Post a Comment