Saturday, 2 September 2017

அனிதா என்ற அனிச்சம்


அனிதா என்ற அனிச்சம்
இன்று உதிர்ந்து போனது...
தமிழகம் அதிர்ந்து போனது... 

ஒரு கிராமத்தின் அத்தியாயம்
'நீட்'டால் தன்னை சுருக்கி
கொண்டது சிறுகதையாய்..

சமூகநீதிக்கு சாவுமணி 
அடித்தது யார்??தமிழக 
அரசா?மத்திய அரசா??

காது கிழிய சத்தமாய்  
இனி அரசியல் கட்சிகளும்
ஊடகங்களும் விவாதிக்கும்..

சுவாதிக்கும் அதை தானே
செய்தன,அவள் ரயிலடியில்
அன்று கொல்லப்பட்டபோது..

நோட்டுக்கு ஓட்டளித்த 
பாவத்தால்,அறசீற்றம் 
இல்லா கோமாளிகளாய் மாறிப்போனோம் நாம்..

No comments:

Post a Comment