இறை ஆணைக்கு பணிந்து
முதிர்ந்த தந்தையொருவர்
தனயனை துறக்க துணிந்த
சோகத்தை,உரக்க சொல்லும்
நாளே இத்தியாக திருநாள்...
தந்தைக்கும் மகனுக்குமான
புரிந்துணர்வை,தியாகத்தை
பறை சாற்றும் இவ்வரலாற்றை
கேட்கும்போதெல்லாம்,நம்
கண்கள் பணிக்கின்றது..
எந்நிலையிலும் எனக்காக
தன்னை வருத்தி,துணை
நின்ற பெற்றோர்களை
நினைத்து மனம் கனக்கின்றது..
முதுகெலும்பென நிற்கும்
திரியானது,எரியும்போது,
அழும் மிளகுவர்த்தி போல
அழுகின்றேன்,பெற்றவர்களை
எண்ணி இத்தியாக திருநாளில்...
உண்மை தியாகிகளாம்
பெற்றவர்களை என்றென்றும்
நெஞ்சத்தில் வைத்திடுவோம்,
போற்றிடுவோம்,புகழ்ந்திடுவோம்..
பெற்றவர்களை தன்னருகில்
பெற்றவர்களுக்கும்,என்னை
போல இழந்து தவிக்கும்
மற்றவர்களுக்கும்,இதயம்
கனிந்த தியாக திருநாள்
வாழ்த்துக்களை பணிவோடு
சமர்ப்பிக்கின்றேன்..!!
No comments:
Post a Comment