Thursday, 29 June 2017

மதமா? மனிதனா??


ஈகை பெருநாளை,ஜுனைது 
தியாகப்பெருநாளாய் 
ஆக்கிவிட்டான்..

ஆசையாய் புத்தாடை வாங்க 
சென்றவனை,ரத்த ஆடையோடு 
சுவனத்திற்குப் அனுப்பி 
விட்டார்கள் பசு நேசர்கள்..

பசு பக்தியால் மனிதனை
கொல்வது பாவம்.காந்தி
பிறந்த மண்ணில் ஒவ்வாத 
செயல் இது .மோடியே 
சொல்லிவிட்டார்..

கோமாதாவை குலமாதா
என்று கொண்டாடுங்கள் 
கோயில் கட்டுங்கள்,
மனிதத்தையும் மறக்காமல் 
கொண்டாடுங்கள்..

மாட்டை நீங்கள் உங்கள் 
இதயத்தில் வைத்தீர்கள்
அது உங்கள் உணர்வு,
உளப்பூர்வமாய் மதிக்கின்றோம்...

பால் மறந்த மாட்டை சிலர் 
வயிற்றில் வைத்தார்கள். 
அது அவர்கள் உணவு..
மதித்திடுங்கள்,மிதிக்காதீர்கள்!!

பெற்றவர்களை அநாதை 
இல்லத்தில் விட்டு விட்டு 
மாட்டை வீட்டில் வைப்பீர்களா??

இறைவன் படைப்பில் 
ஒவ்வொன்றிற்கும்,உரிய 
இடங்களும் உண்டு,உயரிய 
அர்த்தங்களும் உண்டு..

அன்பு சகோதரர்களே..
முடிவு செய்யுங்கள்... 
நாடா? மாடா? ..
மதமா? மனிதனா??

No comments:

Post a Comment