Monday, 3 July 2017

அனாதையாய்,அத்வான காட்டில் அத்வானி!!

அனாதையாய்,அத்வான 
காட்டில் அத்வானி!!
--------------------------------

வீட்டை கட்டியவனையே 
பெற்ற பிள்ளைகள் அடித்து
துரத்திய கதை தான் 
உன் கண்ணீர் கதை..

ஓடி உழைத்து,நீ கட்டிய 
வீட்டின் கிரகப்பிரவேசம் 
நீ இன்றி,மோடி தலைமையில் 
இனிதே நடந்தேறியது..

நீ நாடிய பதவியை 
பிதாமகனே, அது உனக்கில்லை 
என சொல்லி,உன் சங்கை 
அறுத்தது சங்பரிவார்..

ஒரு சமூகத்தின் குடியுரிமையை 
கேள்வியாக்கி,அவர்களை
அக்கினியில் வேள்வியாக்கிய
போது மௌனம் காத்தாய்..

பசுவின் பெயரால்,மண்ணின் 
மைந்தனை இன்று கொல்வது 
அன்று நீ போட்டு தந்த 
துவேஷ பாதையில் தானே..

அன்று பிரதமர் பதவி 
போனது,முதல் குடிமகனாய் 
ஆகலாம் என்ற இன்றைய 
கனவும் தகர்ந்தது...

வளர்த்த கடா உன் 
மார்பில் பாய்ந்து விட்டது..
உன் கதை கேட்க ஆளில்லை 
வீட்டில்,பேச்சிழந்து
இன்று நீ அனாதையாய் 
அத்வான காட்டில்... 

No comments:

Post a Comment