பகலுணவை பகலவன்
மறையும் வரை துறந்து,
புலனடக்கி மனதின்
இச்சைகளை கடந்து
அழுது தொழுது உன்
நினைவை நெஞ்சில்
சுமந்து,முழு திங்களும்
முழுமனதாய் உன்னிடம்
சரணடைந்த எங்களுக்கு
ஈகையாய் இந்த புனித
பெருநாளை தந்த
ரப்புல் ஆலமீனே...
எந்நாளும் எங்களுக்கு
வஞ்சமில்லா நெஞ்சையும்
உற்றார் உறவுகளோடு
பகை மறந்த நட்பையும்
இல்லாதார்க்கு இல்லை
என்று சொல்லாத
ஈகை குணத்தையும்
மனித நேயத்தையும்
மன்னிக்கும் மாண்பையும்
தந்து அருள்வாயாக!!
மண்ணறைக்கு
செல்லும் வரை உன்
நினைவோடு,மாநபி
வழி நடந்து,மனித
மாண்பினை பேணிடும்
நல்ல முஃமீனாய்
எங்களை ஆக்கி
அருள்வாயாக!!
உறவுகளோடும்,சீரிய
நட்புக்களோடும் இந்த
ஈகை திருநாளை
இனிதாய்,இனிமையாய்
குதூகலித்து கொண்டாடும்
பாக்கியத்தை,வல்ல
ரஹ்மானே, எங்களுக்கு
தந்தருள்புரிவாயாக!!
No comments:
Post a Comment