Saturday, 10 June 2017

நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து


நேற்று பதினெட்டு;வாலிப 
வனப்பில் தறிகெட்டு,மதிகெட்டு 
சுற்றும் வயதில் கூட, சரியாய் 
நிற்பான் என் நண்பன் ஷர்பு!!
இன்று அவனுக்கு வயது 
ஐம்பத்தெட்டாம்...
நம்பமுடியவில்லை!!

ஐம்பதில் வளையாதாம்..
நீயோ, அறுபதை நெருங்கியும் 
அன்புக்கு வளைகிறாய்; 
சேவைக்கு அலைகிறாய்;
மூத்தோரிடம்  பணிகிறாய்;
குழந்தையாய் சிரிக்கிறாய்..


காலமும் ஓடுகிறது,நமது 
ரத்த நாளமும் வாடுகிறது.
வாழ்வின் பாதியை 
வேகமாய் கடுந்துவிட்டோம்;
இனி மீதியை என்ன செய்வது
என்ற கவலை உள்ளவர்கள் 
உன்னைக்கண்டு படிக்கட்டும்

மறவாத பண்புகளோடு 
வளமாய்,நலமாய் 
பல்லாண்டுகள் 
நல்வாழ்வு நீ வாழ 
வாழ்த்துகிறேன் !!

இனிய பிறந்த நாள் 
வாழ்த்துக்கள்!!

No comments:

Post a Comment