Thursday, 11 May 2017

ஈரக்கமில்லாத இதயம்


ஈரமில்லா இதயத்தாலும் 
அதிகார மமதையாலும்
போரென்ற  பெயரால் 
மானுடத்தை கூறுபோட்டு
ஈராக்கின் செழிப்பையும்
அழகிய வனப்பையும் 
சிதைத்தழித்த கருணை   
இல்லா கயவர்களால்
பெற்றவளை இழந்தவள் 
இந்த அழகிய பூந்தளிர்..

அது படர  கோல் தேடி  
தன் பூக்காரங்களால் 
தாயை வரைந்து அவளின் 
நெஞ்சில் துயில்வதை 
கண்டபோது கூறிய ஈட்டி 
பாய்ந்து விட்டது நெஞ்சில்..

மிதியடியை ஈன்றவள்  
மேல் பட்டுவிடாமல்  
அவள் காலடியில் விட்டு 
சென்ற இப்பூந்தளிரின்  
பண்பைக் கண்ட போது
கண்களில் செந்நீர் வருகிறது ..

போதியதை தந்தும்
போதவில்லை என்று 
படைத்தவனை நிந்திப்பவன் 
இப்பிள்ளையின் நிலையை 
கண்டால் சிந்திப்பான்..

அவராத்தர் சிராஜ் ..

No comments:

Post a Comment