Sunday, 14 May 2017

"அன்னையர் தின வாழ்த்துக்கள் "

அனைத்து அன்னையருக்கும் 
இதயம் கனிந்த "அன்னையர் 
தின வாழ்த்துக்கள் "

----------------------------------
அம்மா! தோளில் என்னை 
சுமந்தபோது நீ சிரித்தாய்..
என் வாழ்க்கை பயணம் 
தொடங்கியது அன்று

தோளில் உன்னை சுமந்த
போது நான் அழுதேன்
உன் வாழ்க்கை பயணம் 
முடிந்தது அன்று..

உன் நினைவை என்றும் 
சுமந்திடுவேன் இதயத்தில்
நால்வர்  என்னை தோளில் 
சுமந்திடும் நாள்  வரை

உயிர் தந்த உத்தமியே..
நீ சுவனத்தில் இன்பமாய் 
வாழ்ந்திடனும்,இறை அருள் 
என்றென்றும் உனக்கு 
இருந்திடனும் என்று கண் 
கலங்க வாழ்த்துரைக்கின்றேன்!!


No comments:

Post a Comment