வியர்வையை விற்று,தன்
குடும்ப வயிற்றை நிறைத்த விவசாயத் தொழிலாளி,
இன்று தன் மானத்தை விற்க துணிவில்லாமல்,தன்னை .
மாய்த்து,இடுகாடுகளையும்
சுடுகாடுகளையும் நிறைக்கும்
அவலத்தை காண்கிறோம்!!
பொய்யை விற்று வயிற்றை
நிரப்பும் அரசியல் வாதிகளே..
தொழிலார்களை `மே` டே அன்று மேடை போட்டு வாழ்த்திவிட்டு
பின் அவன் வியர்வை வாடை
கண்டு ஒதுங்காதீர்கள்!!
அம்பானிகள்,அதானிகளை
கொஞ்சம் மறந்து, வெட்ட வெளியில்,வேகாத வெயிலில் அயராது உழைக்கும் இந்த தேசத்தின் அபிமானிகள் பக்கம் உங்களின் கருணை பார்வையை கொஞ்சம் திருப்புங்கள்...நாடு நலம் பெரும்..!!
உண்மையாய் உழைப்பவன்
மற்றவனை கெடுக்கவும் மாட்டான்.தன்னை கெடுத்தவனை சபிக்கவும் மாட்டான்.உழைக்கும் வர்க்கம் வாழ்ந்தால் நாம்
வாழும் உலகமும் செழிக்கும்..
No comments:
Post a Comment