நிலவை படைத்தவன்
அது வீசும் ஒளியை,கரும்
மேகத்தால் மறைத்தாலும்
அதை கிழித்து ,வெளிவந்து
தன் பூவிதழை விரித்து சிரிக்கும் ..
அது போல கள்ளம் கபடம்
இல்லா,மாசற்ற பிள்ளை நிலா..
அது வீசும் புன்னகை ஒளி
அது பேசும் மழலை மொழி..
தடம் மாற்ற சிலர் நினைத்தாலும்
தடுமாறா பிள்ளையுள்ளம்....
அது களங்கம் இல்லா புனித
அன்பு...அன்பே அன்றி வேறொன்றும்
இல்லை..இறைவா அப்பிள்ளை
உள்ளதை எனக்கு அருள்வாயா ..??
No comments:
Post a Comment