Monday, 24 April 2017

நெஞ்சுக்கினிய கூத்தாநல்லூர்!!


நெஞ்சுக்கினிய கூத்தாநல்லூர்!!

வெண்ணாற்று கரையில்  மாறுகின்ற காலத்தினூடே பாரம்பரியத்தை
மறவாத பார் போற்றும் பெரும் ஊராய்
 என்றும் திகழும்பண்பாளர்கள்
  
நிறைந்த,பகட்டில்லா ஊரே  எங்கள் கூத்தாநல்லூர்!!
கண்டவர்கள் சின்ன சிங்கை  என்றும்,ஊரில் உண்டவர்கள்  குட்டி வளைகுடா என்றும்  வியந்து சொல்லும் அழகிய  ஊர்,நெஞ்சுக்கினிய  எங்கள் கூத்தாநல்லூர்!!
சாதி மத பேதமில்லை இங்குசமத்துவத்திற்கு பங்கம் இல்லை.. பாலை நிலத்திலிருந்து ஏழைகள்  எல்லாம் பிழைப்பு  தேடி, நாடி  வரும் ஊரு,நெஞ்சுக்கினிய  எங்கள்  கூத்தாநல்லூர்!!
நல்மரபை கற்றுத்தந்த  முன்னோர்களால் அன்பொழுக  பழகும்,பண்பான,பாசமிகு மக்கள்  நிறைந்த ஊரு,நெஞ்சிக்கினிய எங்கள் கூத்தாநல்லூர்!!
தீன் ஒளி பரப்பும் அரபி  மதரஸாக்கள்,அதில் பட்டம்  பெற்ற ஆலிம்களும்,உலமா   பெருமக்களும்உலாவரும்  புனிதமான ஊரு
நெஞ்சிக்கினிய  எங்கள் கூத்தாநல்லூர்!!
தனியார் பள்ளிகளின்  தரத்தையும் விஞ்சி  காசற்ற ஏழைகளுக்கும்  மாசற்ற கல்வி தரும்  ஜாமியா,மற்றும் மன்ப உல் உலா பள்ளிகள்..
தொழுதிட தெருக்கொரு  பள்ளி,காண்போரின்  உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அழகிய இல்லங்கள்  மாட மாளிகைகளாய்!!எங்கள்  ஊரே ஒரு கவிதை தான் !!
ஊரிலும்,கடல் கடந்து பல நாட்டிலும் நேர்மையாய் உழைப்பவர்களும், தான  தர்மம் கொடுப்பவர்களும்  நிறைந்த தரணி போற்றும்  ஊரு, எங்கள் ஊரு!!    அம்மரபில் வந்த ஈகை  குணம் கொண்ட மலேசியா  வாழ் நம் மண்ணின் மைந்தர்களின்  சங்கமம்..கூத்தாநல்லூர் சிலாங்கூர்  அஸோஸியேஷன் என்ற பெயரில்  அல்லாஹுவின் அருள்  ஈட்ட,கொடுப்பதற்காகவே  கூடும், உங்களின் வருடாந்திர கூட்டம் வெற்றி பெற்று உங்கள்  நற்பணி சிறக்க என் வாழ்த்துக்கள்!!
வறியோரை வாரி அணைத்து  வனப்பாக்கி ,அழகு பார்க்கும்  உங்கள் சங்கத்தின் சேவை  என்றென்றும் தொடர ,
எல்லாம் வல்ல இறைவனிடம் கையேந்தி  மனமுருகி பிரார்த்திக்கின்றேன்!!

No comments:

Post a Comment