Monday, 10 October 2016

மனிதம் எங்கே?மனிதம் எங்கே??





தனி மனித விழுமியங்கள்
மறக்கப்பட்டு,பண்பாடுகள் எல்லாம் 
விரட்ட பட்டதால் ,மனிதமும் 
துரத்தப்பட்டது..பாவம் அது 
வெகு தூரம் போய்விட்டது!!

மனிதன் இயந்திரமாய் 
இதயமற்ற ரோபோவாய்
மாறிப்போனதால் ,அவனை 
செப்பனிட படித்தவனை விட 
ஆயுதம்  பிடித்தவனே
போதும் என்றானது .

ஆம் ,உலோகத்தாலான 
இதயம் ,அடித்தவனுக்கே
தன்னை படுத்தியவனுக்கே 
பணிந்தது,படைத்தவனை 
மறந்தது..

ஆயுதம் தாங்கிகள்ஆட்சியில் 
இருப்பதால் ,வேதங்களும் 
சான்றோர்களின் நல்ல
போதங்களும் கேட்பாரற்று 
வெகு தூரம் போய்விட்டது ..

மனிதம் எங்கே??மனிதம்
எங்கே?? தேடி என் உள்ளம்
அலைகிறது!! கண்கள்  நனைகிறது !!

No comments:

Post a Comment