ஓருயிராய் எங்களை நேசித்த
எங்கள் ஆருயிர் நூர் அண்ணன்!!
ஓடிவிட்ட விட்ட வாலிபத்தை
எண்ணி வருந்தி,தொடர்ந்து
வரும் முதுமையை நிந்திப்பவர்கள்
மத்தியில்,இவர் என்றும்
இளமையான வருத்தப்படாத
வாலிபர் !!
மெத்த படித்தவர்,வாசித்த மொத்த
நூல்களையும் தொகுத்து,தான்
நேசித்த நண்பனின் பெயரில்,
நூலகம் அமைக்க முயன்றிடும்,
எங்கள் நடமாடும் கல்விக்
கூடம், இவர் என்றும் இளமையான வருத்தப்படாத வாலிபர் !!
தமிழகத்தின் ஒப்பற்ற கால்பந்து
வீரர்தம் திறனை,நாமெல்லாம்
காண,தன் உழைப்பால் வந்த
நிதி காட்டி,நம் கூத்தன் மாநகருக்கு
கொண்டு வந்த வழிகாட்டி!!
கலங்கரை விளக்கமாய் உயர்ந்து
நின்ற,எங்கள் வாழ்க்கையின்
திசை காட்டி!!இவர் என்றும் இளமையானவருத்தப்படாத
வாலிபர் !!
என்றும் உம்மை சுற்றி ஒரு
கூட்டம்!!உமது அன்பால்
கட்டுண்ட நண்பர்களின் கூட்டம்,
உமது குடும்பமே அன்பையும்,
பண்பையும் பரப்பும் ஒரு
கூட்டம் தானே!அதுவே
உங்களின் நாட்டமும் கூட!!உமது
குலம் சிறக்கட்டும்,பெருக்கட்டும்,
பல கிளைகளை கொண்ட ஆல
மரமாய் என உளமார
இறைவனிடம் வேண்டுகிறேன்!!
நல்ல எண்ணம் கொண்டோர்
நிறைவாய் வாழ்வது திண்ணம்,
என்ற முதுமொழிக்கு சாட்சியமாய்
பெரிய குடும்பத்திற்கு தலைவனாய்
எங்கள் உள்ளத்தின் நிரந்தர
முதல்வனாய் ,ஆருயிர்
அண்ணனாய் வாழும் உம்மை
பல்லாண்டு வாழ்க வாழ்க என
வாழ்த்துகிறேன் மனதார!
No comments:
Post a Comment