புரூனேயில் கல்விக்கான
உயரிய விருதை பெற்ற
மதிப்பிற்குரிய கே. எம் .முஹம்மது
அலி அண்ணனை மனதார
வாழ்த்துகிறோம்!!
------*--------**-------------
அயல் நாட்டின் விருதுகள் பல
உம்மை தேடி வந்தன,ஆனாலும்
உனது உள்ளத்தின் பழைய
நினைவுகளின் விழுதுகள்,மலைக்
கோட்டை மாநகரின் புகழுக்கு கட்டியம் சொல்லும் ஜமால் முஹம்மது கல்லூரியின்
வகுப்பறைகளில் தான் உலா வரும் என்பதை திண்ணமாய்
நான் அறிவேன்!!
புரூனேயில் ஏற்ற மிகு வாழ்வை
கண்டாலும் ,உனது எளிய நடையில்
உடல் எடையில்,ஏன் உனது
தோற்றத்திலும் கூட
மாற்றமில்லை!!பருவம்
மாறினாலும்,ஒல்லியாய் அதே
உருவம்!!அல்லிக்கேணி திடலில்,
அள்ளி தேனை தெளிப்பது போல,
தித்திக்க நீ பேசி,விளையாடிய
திகட்டாத நாட்களும்,எழுவர்
கால்பந்து போட்டியில் நடுவராக
நீ நின்ற காட்சியும் என் நினைவில்
இன்றும் நிழலாடுகின்றது!!
புது முக வகுப்பில் நான் சேர்ந்த
தருணம்,உமது இல்லத்தில் நூர் மைதீன்,கலிக்குள் ஜமான் அண்ணன்மார்களோடு
வலை கட்டி பூப்பந்து விளையாடிய அந்த களை கட்டிய மாலை பொழுதுகளை நினைத்து பார்க்கிறேன்!!என்னை
போன்ற எளியவனிடமும்
அன்பாய் பழகும் பண்பாளன் நீ!!
திருச்சிக்கு வந்த மாணவர்களின்
வாழ்க்கையை ,அழகாய் திருத்தி
அமைத்தவனே!!அதில் திருப்தி
அடைந்தவனே!!இன்று புரூணை
மலேயா நாடுகளில் உன் ஆங்கில
புலமையால் மாணவர்களின்
நிலைமையை உயர்த்தியவனே,
அதனால் நாட்டின் தலைமையை
ஈர்த்தவனே!!இன்னும் பல
விருதுகள் உன்னை அலங்கரிக்க
ஓடி வரும்!!பல உயர்வுகள்
உன்னை நாடி வரும்..நமது
கூத்தாநல்லூருக்கு அந்நிய
மண்ணில் புகழ் சேர்க்கும்
உன்னை,வாழ்க வாழ்க என
உளமார வாழ்த்துகிறேன்!!
உயரிய விருதை பெற்ற
மதிப்பிற்குரிய கே. எம் .முஹம்மது
அலி அண்ணனை மனதார
வாழ்த்துகிறோம்!!
------*--------**-------------
அயல் நாட்டின் விருதுகள் பல
உம்மை தேடி வந்தன,ஆனாலும்
உனது உள்ளத்தின் பழைய
நினைவுகளின் விழுதுகள்,மலைக்
கோட்டை மாநகரின் புகழுக்கு கட்டியம் சொல்லும் ஜமால் முஹம்மது கல்லூரியின்
வகுப்பறைகளில் தான் உலா வரும் என்பதை திண்ணமாய்
நான் அறிவேன்!!
புரூனேயில் ஏற்ற மிகு வாழ்வை
கண்டாலும் ,உனது எளிய நடையில்
உடல் எடையில்,ஏன் உனது
தோற்றத்திலும் கூட
மாற்றமில்லை!!பருவம்
மாறினாலும்,ஒல்லியாய் அதே
உருவம்!!அல்லிக்கேணி திடலில்,
அள்ளி தேனை தெளிப்பது போல,
தித்திக்க நீ பேசி,விளையாடிய
திகட்டாத நாட்களும்,எழுவர்
கால்பந்து போட்டியில் நடுவராக
நீ நின்ற காட்சியும் என் நினைவில்
இன்றும் நிழலாடுகின்றது!!
புது முக வகுப்பில் நான் சேர்ந்த
தருணம்,உமது இல்லத்தில் நூர் மைதீன்,கலிக்குள் ஜமான் அண்ணன்மார்களோடு
வலை கட்டி பூப்பந்து விளையாடிய அந்த களை கட்டிய மாலை பொழுதுகளை நினைத்து பார்க்கிறேன்!!என்னை
போன்ற எளியவனிடமும்
அன்பாய் பழகும் பண்பாளன் நீ!!
திருச்சிக்கு வந்த மாணவர்களின்
வாழ்க்கையை ,அழகாய் திருத்தி
அமைத்தவனே!!அதில் திருப்தி
அடைந்தவனே!!இன்று புரூணை
மலேயா நாடுகளில் உன் ஆங்கில
புலமையால் மாணவர்களின்
நிலைமையை உயர்த்தியவனே,
அதனால் நாட்டின் தலைமையை
ஈர்த்தவனே!!இன்னும் பல
விருதுகள் உன்னை அலங்கரிக்க
ஓடி வரும்!!பல உயர்வுகள்
உன்னை நாடி வரும்..நமது
கூத்தாநல்லூருக்கு அந்நிய
மண்ணில் புகழ் சேர்க்கும்
உன்னை,வாழ்க வாழ்க என
உளமார வாழ்த்துகிறேன்!!
No comments:
Post a Comment