Wednesday, 20 July 2016

ஸ்மார்ட் போன்.

இந்த பதிவு ஸ்மார்ட் போனை 
ஸ்மார்ட்டாக பயன் படுத்தும்
நண்பர்களுக்கு இல்லை..
-----**----------**-----

ஸ்மார்ட் போன் வந்தது..  
நம் நினைவுகளை ,புகைப்படமாய்
தந்த காமெராவை ,நீங்கா 
பகைப்போல் வெறுத்தோம்!! 

ஸ்மார்ட் போன் வந்தது..
நேரத்தை நேர்பட காட்டிய
கை கடிகாரத்தை ,கையில் கட்ட 
ஆணவமாய் மறுத்தோம்!! 

ஸ்மார்ட் போன் வந்தது..
இருட்டில் ஒளி காட்டி,
வழி காட்டிய டார்ச் லைட்டை 
எளிதாய் மறந்தோம்!!

ஸ்மார்ட் போன் வந்தது..
செய்திகளை சொன்ன ரேடியோ
பேச்சிழந்தது,நாம் மறந்ததால் 
இறுதியில் தன் மூச்சிழந்தது!!

ஸ்மார்ட் போன் வந்தது..
காதுகளை இசையால் குளிர்வித்த 
MP3, தேசாந்திரி ஆனது.கோபத்தால் 
நம் வீடு விட்டு போனது!!

ஸ்மார்ட் போன் வந்தது..
கடிதம் நம்மை கடிந்து கொண்டு 
போனது,செயல் இழந்த அஞ்சல் 
பெட்டி,மீளா துயிலில் அடக்கமானது!!

ஸ்மார்ட் போன் வந்தது..
கணக்கு பார்த்த கால்குலேட்டர்  
எனக்கு வேண்டாம் என்றதால்
குப்பைக்கு தானே போனது!!

ஸ்மார்ட் போன் வந்தது.. 
கம்ப்யூட்டர் மேசைக்கு பாரம்
என்றதால் ,பழைய சாமான்களோடு 
பரணிக்கு போனது!!

ஸ்மார்ட் போன் வந்தது..
நேரம் போனது ஆனால் 
வாழ்க்கையின் சாரமும்
போனது, அமைதியும் போனது..

எதிரில் உள்ள மனைவியிடம் 
பேசாமல், கூசாமல் நீ உனைமறந்து
எங்கோ உள்ள முகமறியாத 
முகநூல் நண்பியிடம் மொக்கை
போடுபவனே, உன் ஸ்மார்ட் போன் 
மனைவியின் கையிற்கு போனால்
நீயும் காணாமல் போவாய்!!

ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 
கழுத்து தொங்கி, அறிவு மங்கி 
போனவனே,ஆற்றலோடு 
ஸ்மார்ட்டாய் மீண்டு வா!!

No comments:

Post a Comment