Monday, 27 June 2016

உணவை பாதுகாப்போம்.

பசிப்பிணியால் அவதியுறும் 
வறியவனின் வலியை,பொருள்
உடையவன் அறிய, இறை 
வகுத்த திட்டமாம், ஷரியத்தின் 
சட்டமாம் புனித ரமலானில்
உண்ணாமல் நோன்பிருந்து 
பசியை உணர்ந்தோம்,உணவின் 
அருமையை அறிந்தோம்!!

சாக்கடையிலும்,பூக்கடையிலும்
காடுகளிலும் ,வயல்வெளிகளிலும் 
சமுத்திரங்களிலும்,சாலைகளிலும் 
நடு நிசியிலும் தன் கடும் பசி
போக்க உழைப்பவனை நினைத்தால்,
நம் உள்ளம் கனக்கிறது..பசியின்
கொடுமை புரிகிறது!! 

உணவை விரயம் செய்வதை 
வழக்கமாய் கொண்ட சிலருக்கு 
சிதற விடும் ஒவ்வொரு உணவு
துளியிலும் வறியவன் ஒருவனின்
உயிர் இருப்பதை உணர்த்த
சிறுநீரை குடிநீராய் கொண்டு 
வாழும் சில ஆப்பிரிக்க தேசங்களின்
வரை படத்தை காட்டுங்கள்!! 

உணவும் உடையும் சிலருக்கு 
கனவாய் போனது, சிலருக்கு 
இறைவனின் வரமாய் வந்தது!!.
மனிதா!! உனக்கு தந்தவனை 
மறக்காதே,இல்லாதவனை 
வெறுக்காதே! நீ பெற்றது 
மற்றவருக்கு கொடுப்பதற்கே!

உணவிற்கு வேண்டி,பொருள் 
ஈட்ட,தோளில் தினவு 
உள்ளவரை ஓடும் நாம்,
அல்லாஹுவின் அருள் ஈட்ட ,
அவன் தந்ததை இல்லாதாரோடு 
பகிர்ந்துண்டு ,அவன் 
பொருத்தத்தை பெற்றிடுவாமாக!!
ஆமீன், ஆமீன் யாரப்புள் 
ஆலமீன்!!

No comments:

Post a Comment