கால் கடுக்க நடந்து,தன்
குடும்பத்தை தோல்
கொடுத்து சுமந்த ஒரு
பாமரனின் காலனி இது!!
விலங்கு தோலால்
ஆன காலனி வேண்டாம்
என உறுதியாய், ஜீவ
காருண்யம் காக்கும்
ஒரு மாமனிதனின்
மிதியடி இது !!
கல்லும் முள்ளும் குத்தாமல்
சுடும் மணலும் பாதத்தை
அண்டாமல் காத்திடும்
செருப்பை,பகைவன்
மீது கோபம் வந்தால்
செருப்பால் அடிப்பேன்
என அதை ஆயுதமாக்கிய
மனிதன் அற்பமானவன்!!
காலடியில் கிடக்கும்
தோழனை ஆயுதமாய்
ஆக்கியவர்கள் மத்தியில்
செருப்பின் உறுப்புகளை
சிதறாமல் கோர்த்த இந்த
சிற்பி அற்புதமானவன்,, இது
சாதாரண காலனி அல்ல
பாத அணி இது
No comments:
Post a Comment