எழுபத்தைந்து ஆண்டு நிறைவு
செய்யும் பழ முதிர் சோலையே!
எங்கள் கவிக்கோவே!எங்களுக்கு
உன் கவிதை எனும் பழரசம்
தந்து பல ரசம் தந்தாய்!!
உன் கவிதையை படித்தேன்
என்றவர்கள் அது படி தேன்
என்றனர்,ஆம் அது இனித்தது
சமரசம் சொல்லி நம்மை
இணைத்தது!!உண்மையை
உரக்க சொல்லும் போது
உறைத்தது,அதன் தாக்கம்
கல் நெஞ்சையும் கரைத்தது!!
லுங்கி கட்டிய தமிழ் சொற்களின்
வங்கியே!! கரை வேஷ்டிகளும்
வெள்ளி திரை கோஷ்டிகளும்
உன்னை ஈர்க்கவில்லை,அதனால்
நீ அவர்களிடம் தோற்கவில்லை!!
வாணியம்பாடியின் பால் வீதியில்
கவிப் பாடிய குயிலே!
மதுரையில் இருந்து வந்த
துரையே!தமிழ் எனும்
வற்றாத ஜீவ நதியின் கரையே!
உன் கவிதையால் நீ பாராண்டு,
நூறாண்டு கடந்து வாழ
வாழ்த்துகிறோம்!!.
No comments:
Post a Comment