Sunday, 5 June 2016

பண்னைபுரத்திற்க்கு பஹ்ரைனிருந்து ஒர் கவிதை




பண்ணைப்புரத்தில் பிறந்த
உன்னைத்தரத்தில் உயர்த்தியது,உன்
ரத்தத்தில் ஊறிய இசைத்தானே!!
உழைத்து கலைத்தவனை, உன்
கலைத்தமிழ் பாட்டால் திளைக்க
வைத்த இசைத்தேவனே!!

எங்கள் மன வலிகளை, உன்
இசை எனும் ஒலிகளால்
வருடி மருந்திட்ட மருத்துவன் நீ !!
எங்கள் சோகங்களை உன்
ராகங்களால் துரத்தியவன் நீ !
எங்கள் இசை யாழ் நீ !!

எங்கள் காதலுக்கும்,வாழ்கையின்
தேடலுக்கும் பாடியவன் நீ!! ஆயிரம்
படங்களுக்கு இசைத்து,எங்கள்
உள்ளங்களை அசைத்தவனே!!
ஆசை துறந்தவனே!!ஞானியே!!
மெஞ்ஞானியே!!

நீ ஆயிரம் பிறை கண்டு பாக்கள்
பல்லாயிரம் படைத்தது
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம் !!

No comments:

Post a Comment