பேராசியருக்கு பாராட்டு
எம்மூரில் பிறந்து,சத்தமில்லாமல்
நித்தம்,சிங்கையில் கல்வி
சேவையை செய்யும் வெண்தாடி
சிங்கமே!!நமதூரின் அங்கமே!!
மன்ப உல் உலாவின் முன்னாள்
மாணவ செல்வமே!! எங்கள் அன்பு
சகோதரன் அமானே!!
உள்ளத்தில் கர்வம் கொள்ளாமல்
பறை சாற்றி ஊரெல்லாம்
சொல்லாமல், உள்ளுணர்வோடு
கல்விக்கு உழைத்திடும் ,உயரிய
நற்பன்புகளுக்கு உரியவனே !!நம்
பள்ளியின் பெருமையை,கீழ்திசை
நாட்டிற்கும் எடுத்து சென்று
பேராசானாய் அம்மண்ணில் உலா
வரும் கல்வியின் காவலனே!!
கல்வி சாலையை சோலையாய்
ஆக்கி ,பிள்ளைகளை மிரட்டாமல்,
விரட்டாமல் நேசத்துடன்
நேர்த்தியாய்,கல்வி தனை
கனிவாய் ஊட்டி,மாணவர்களின்
தூக்கம்தனை நீக்கி,உள்ளத்தில்
ஊக்கமதை ஏற்றி, தேர்வினை
எளிமையாய் வென்றிட,திசை காட்டி
வழி காட்ட வந்த வெண்தாடி
சிங்கமே,எங்கள் அமானுல்லாவே!!
சிங்கையின் ரிபப்ளிக் தொழில்
நுட்ப கல்லூரியில்,சிம் குலோபலில்
உன் சிம்ம குரல் ஒலித்தது,மாணவ
சமுதாயம் விழித்தது,நீ காட்டிய
வழியில் நடந்ததால் அவர்கள் கண்ட
கனவும் பலித்தது,பேரும் புகழும்
உன்னிடம் தஞ்சமடைய துடித்தது!!
ஈன்றவனை விட, பள்ளியில்
நம்மை கையில் ஏந்தி
அறிவுலகத்திற்கு அறிமுகம்
செய்த ஆசான் மண்ணில்
உயர்ந்தவன்,ஆதலால் நீயும்
எங்கள் உள்ளத்தில் உயர்ந்தவன்.
கணிதம் படித்த உன் அறிவை
மறுப்பின்றி,செருக்கின்றி
மற்றவருக்கும் கொடுக்கும் உன்
புனித எண்ணம் தான் உன்னை
சிகரத்தில் ஏற்றி வைத்தது!!எங்கள்
உள்ளத்தில் தூக்கி வைத்தது!!
வற்றாத உன் கல்வி அறிவை
வாரி வாரி எல்லோருக்கும்
கொடுக்கும் வள்ளலே,இந்திய,
சீனம்,மலாய் என பல்லின மக்கள்
போற்றிட சிங்கையில் வாழும்
உன்னை, இந்த சொல்லாடை
கொண்டு போற்றுவதொடு,
பொன்னாடை கொண்டு போர்த்தி
வாழ்த்துவதில் எங்கள் மூவா
அமைப்பு பெருமிதம் கொள்கிறது!!
உன் சீரிய பணி சிறந்திட
கல்வி சேவை தொடர்ந்திட
மன்ப உல் உலா பள்ளி
ஆசிரியர்களும்,அதன்
நிர்வாகமும்,முன்னாள்
மாணவர்களும்,இன்னாள்
மாணவர்களும் இணைந்து
மனமார ,உளமார நீ
இறை அருளோடு பல்லாண்டு
வாழ வாழ்த்துகிறோம்!!
No comments:
Post a Comment