Sunday, 22 November 2015

தியாக திருநாள் வாழ்த்துக்கள்

பிள்ளை வரம் வேண்டி அந்த 
வல்லோனை தொழுது ,தினம் 
அழும் பலரை கண்டுள்ளோம்..
தள்ளாத வயதில் தான் பெற்ற 
பிள்ளையை அந்த வல்லோனுக்காக
பலிப்பீடம் ஏற்றிய தந்தையை
கண்டதுண்டோ??

கழுத்தில் வைத்த கத்தி அறுக்க 
மறுக்க,திகைத்த தந்தையிடம் 
உங்கள் சிந்தையில் எனை இருத்த
வேண்டாம் ,மீண்டும் அறுத்து 
பாருங்கள் என சொல்லும் 
தனயனை கண்டதுண்டோ??
இறை ஆணைக்கு பணிந்து
இறக்க துணிந்த தனயன் 
இஸ்மாயில் நபியும்,பாசத்தை 
துறக்க துணிந்த தந்தை 
இப்ராஹீம் நபியும் தியாகத்தின் 
எல்லை கடந்து சரித்திரம் கண்ட 
இந்த தியாக திருநாளில் நம்மை 
நாமே பலியிடுவோம் ..
ஆம், திகைக்க வேண்டாம் 
ஆடு மாடு ஒட்டகையுடன் 
நம் அகம்பாவம் ஆணவம்
கர்வம் பெருமை என தீக்குணங்களை 
பலியிட்டு மனிதத்தின் மாண்பை 
சொன்ன நபி நாதர் வழியில் 
இறை நேசத்தை பெற்றிடுவோம்

அன்பு நெஞ்சங்களுக்கு எனது
தியாக திருநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment