Sunday, 22 November 2015

மீசை உள்ள சேலை கட்டியவனே - வேண்டாம் வரதட்சனை

மணம் முடிக்க பல்லிளித்து
பணம் கேட்டு, உன் சுய
 
குணம் மறைத்து மணந்தவனே,பின்
 
தினம் அவளை துன்புறுத்தி
ரணமாக்கும் கேவலம் ஏன்??
மானம் கெட்டவனே...
தட்சணையாய் பணம் 
கேட்டு திருமண உறவின்
 
புனிதம் குலைத்து
வணிகமாக்கிய உன் தாய் தந்தை பெற்ற
 
சில்லறையா நீ
ஞானம் கெட்டவனே
திருமண பங்கு சந்தையில
உன்பங்கு என்ன?
மீசை உள்ள
சேலை கட்டியவனே
தாரதிற்காக பாரம் சுமந்து
ஓடி உழைக்கும் கூலி,
தட்சணைக்காக
சோரம் போன உன்னை விட
தைரியசாலி...
மண வாழ்வில் கைபிடிக்க வந்தவளிடம்
பணம் கேட்பவனே
பிச்சை எடுப்பது குற்றம்
 
என்று சட்டம் வந்தால், பட்டம் படித்தவனே
நீ கம்பி எண்ணி இருப்பாய்.!

உன் கை பிடிக்கும் பெண்ணவளை
உன்னில் ஒருவளாய் என்னவளே
 
என இதயத்தில் ஏற்று கொள்
இறை வழியில் உன்னை
 

மாற்றிகொள்!

No comments:

Post a Comment