ஈன்ற தாயின் மடியில்
தவழ்ந்து
,பின் அவள் கை பிடித்து
நடை பழகி ,
அவள் நம்மை
அலங்கரித்த நல் உடை பழகி
தந்தையால்
நன்னடத்தை
எனும் நன்னடை பழகி,
இறை தந்த மறை பழகி,நபி
காட்டிய வழி பழகி,
தொழும்
முறை பழகி, துவக்க பள்ளியில்
எழுத்து பழகி,எழுத பழகி ,
படிக்க பழகி,பின்
நண்பர்களின்
நட்பு பழகி,கல்லூரியில்
உலக
நடப்பு பழகி,வாலிபத்தில்
காமம் பழகி,காதல் பழகி ,
அது தந்த களவி பழகி,
மனைவி பழகி ,
அவள் தந்த
பிள்ளை பழகி,பின்
வாழ்வாதாரத்திற்குவேண்டி
மூச்சிரைக்க ஓட பழகி
உழைக்க பழகி,சில சமயம்
நடிக்க பழகி ,
அதன் மூலம் பிழைக்க
பழகி, அது தந்த பலனில்
இன்புற்று
திளைக்க பழகி,ஆணவத்தில்
கர்வம் பழகி ,
கோபம் பழகி ,குரோதம்
பழகி,விரோதம் பழகி ,அதனால்
ரத்தம்
தரும் அழுத்தம் பழகி ,பித்தம் பழகி
பின்
உயிர்காக்கும் யுத்தம் பழகி,
நித்தம் மருத்துவனின்
சத்தம் பழகி
சோர்ந்து போனேன் நான்..
காலமே!!
எனை மீண்டும் பள்ளி
பருவத்துக்கு கொண்டு செல்வாயா??
துள்ளி திரிந்த பள்ளி நாட்களை
கில்லி எரியாமல் மீட்டு தருவாயா?
பால்வடியும் பிள்ளைகளாய்
எங்கள் முகம் காட்டும்
நகலை
கால் பந்தாட்டத்தில் பெற்ற
வெற்றி
கோப்பையோடு
படமாய் கண்ட போது
உற்சாகத்தில் எனை மறந்தேன்!!
No comments:
Post a Comment