Monday, 16 November 2015

இரங்கற்ப



அன்பு அண்ணன்  இஸ்மாயிலே!!
உன் மாசற்ற பொன் சிரிப்பால்
பாசத்துடன் பகைவனையும்
கவர்ந்த பண்பாளன்  நீ!!


மண்ணுக்கும் பொன்னுக்கும்

ஆசையின்றி வாழும் யோகி
போன்று ,ஓசை இன்றி
வாழ்ந்தாய்.ஆனால் உரக்க
உன் கால்கள் கால்பந்தாட்டத்தில்
பேசிய பாசை ஊர் அறிந்த ஒன்று


கோபத்திற்கு உன் மேல்

கோபமாம்,அதனால் தான்
நீ இருக்கும் திசை நோக்கி
அது வந்ததில்லை.உன்
பிள்ளைகளை கூட நீ
சினந்து பேசி கண்டதில்லை


எல்லோருக்கும்,ஹெச்சாருக்கும்

(H R Noor ) ஆதரவாய்,
அன்பிற்கு இலக்கணமாய்,பண்பிற்கு 
அடையாளமாய்,நடையில்,
உடையில் அடக்கமாய்
எங்கள் உள்ளத்தை கொள்ளை
கொண்ட நீ, இன்று பள்ளி
கொல்லையில் அடக்கமானாயோ??


எல்லாம் வல்ல அல்லாஹ்

உமது பிழைகளை மன்னித்து
சுவனத்தில் நற்பதவி தர
இரு கையேந்தி பிரார்த்திக்கிறேன்

No comments:

Post a Comment