Sunday, 22 November 2015

என்னருமை முஸல்லாவே !

என்னருமை முஸல்லாவே !
முழுமனதாய் நானுன்னை
நேசிக்கிறேன், பல சமயம் 
நானுன்னை யோசிக்கிறேன்!
பள்ளியில் எங்கள் ரப்பை
நேர்பட தொழ பல ஷப்பை
சீர்பட செய்யும்
உன்னை யார் சொன்னது
வெறும் தொழுகை விரிப்பென்று?
சுவனத்திற்கு சுருக்குவழி காட்டும்
ரத்தினக் கம்பளம் நீ !!
நன்மாராயம் ஈட்டித்தரும்
அட்சயப் பாத்திரம் நீ !!
மதியாதார் முற்றம் மிதியாதே
என்பார் சான்றோர் ..நீயோ
உன்னை மிதித்தவர்களை மதித்து
சுவனத்திற்கு வழி காட்டுகிறாய்!!
பத்திரமாய் பூட்டி உன்னை பெட்டியில்
மறந்தோற்கு..இறை நன்றி கொன்றோர்க்கு
மரண பெட்டியில் நால்வர் சுமக்க
செல்லும் போது கை எட்டும் தூரத்தில்
வந்து நிற்கும் நரகம் ..!!!

சுவனத்திற்கு வழிகாட்டும் கம்பளமே!!
உன்னை விரித்து தொழும்போது
ஈமான் பலப்பட்டு விசாலமடைந்தது
எம்பலமே!!!!

No comments:

Post a Comment