Sunday, 22 November 2015

வல்லோனுக்கு எப்படி நன்றி சொல்வோம் ??

ஏற்றமிகு ரமலானின் பிறை கண்டு
படைத்தவனின் அருள் வேண்டி,
இறைமறை வழியில் தம் குறை களைய
உண்ணா நோன்பிருந்து
திருநபி வழி நடப்பவர்கள் முமீன்கள்!!

நம்மை படைத்து பரிபாலிப்பவன்
அவனே!! நமக்கு செல்வம் கொடுத்தான் !!
அறிவு கொடுத்தான்!! ஆற்றல் கொடுத்தான்!
அருட்கொடையாய் புனித வேதம்
கொடுத்தான்!! உத்தம நபியை கொடுத்தான் !!
இத்தரணியில் அத்தனையும் தந்த
வல்லோனுக்கு எப்படி நன்றி
சொல்வோம் ??

இந்த புனித ரமலானில்
நடு நிசியில் எழுந்து புசித்து
அதிகாலை முதல் அந்தி வரை
உண்ணாமல் உறங்காமல்
கடும் பசியில் அழுது தொழுது
திருமறை தனை எடுத்தோதி
வல்லோனுக்கு நன்றி சொல்வோம் !!

ஈமானில் வழுவாமல்! ஐங்கால
தொழுகையில் நழுவாமல்
இருந்திடுவோம் !! புனித ரமலான்
நோன்பிருந்து,ஈகை வரியை
இல்லாதாருக்கு கொடுத்திடுவோம்..
கணபொழுதும் அவனை மறவாமல்
வழி பிறழாமல், இரட்சகன்
அவன் நினைவாய் வாழ்த்திடுவோம்.!!

பாக்கியமாய் நீ எமக்கு அருளிய
அறிய ரமலானில் இறைவா
நாங்கள் செய்யும்நல்ல அமல்களை
ஏற்றருள்வாயாக!!!

அறிந்தும் அறியாமலும் யாம் செய்த
பாவங்களை மன்னித்து அருள்வாயாக !!

என்றென்றும் உன்வழி நடக்கும்
நல்ல முமீன்களாய் எங்களை
மாற்றி அருள்வாயாக!!!

No comments:

Post a Comment