விளையாட்டை முன்னிறுத்தும்
விளையாட்டுக் கழகங்கள்
பல உண்டு ..கேளிக்கையில்
களித்திடும் விளையாட்டு
கழகங்களும் பல உண்டு..
சில விளையாட்டுக் கழகங்கள்,
விளையாட்டுத்தனமான
கழகங்கள் இல்லை அவை..
போதை அரக்கனை பின்
தொடரும் இளைஞனை,மனம்
மாற்றி,மடை மாற்றிட, மாற்றி
யோசித்த மரடோனா கால்பந்து கழகத்தை பாராட்டுவோம்..
இரவெல்லாம் பெருமழை..
காலையில் பெரும்படை..
போட்டி நடக்குமா என்ற அச்சம்
தீர்க்க வந்த பெரும்படை..
இரவில் பெய்த மழைத்
துளிகள் ஓய்வெடுக்க,
காலையில் பனித்துளிகள்
பந்தய வீரர்களை வரவேற்க,..
அடர் பனியிலும்,தொடர்
முயற்சியோடு, வீறு கொண்ட
வேங்கையென ஓடிய
மாரத்தான் போட்டியாளர்கள்..
எழுச்சியோடு தொடங்கி
மகிழ்ச்சியோடு முடிந்த
மாரத்தான் போட்டி, நம்
இளைஞர்கள் நல்வழியில்
மாறத்தான் நடந்தது..
மினி மாரத்தான் போட்டியை
திறம்பட நடத்திய மரடோனா
கால்பந்து கழகத்திற்கு
அன்பும்,பாராட்டுக்களும்
வாழ்த்துகளும்...

No comments:
Post a Comment