ஆணைகள் அறிவிப்புகள்
அணிவகுத்து வருது...
யாரைத்தான் நம்புவது?
யாருத்தான் நடத்துனர்
யாருத்தான் ஓட்டுநர்
வாக்களித்தவன் கேட்கிறான்..
சாணக்கியன் இருந்தால்
அரசியல் பாடம் படிக்க
பெரியப்பள்ளி குளக்கரைக்கு விரைந்தோடி வந்திருப்பான்..
எதிராய் உள்ளோரை வென்றிட
சாம தான பேத தண்டம்
என்ற நான்கு படி நிலை
உண்டு என்று பண்டைய
வேதங்கள் சொன்னது.
விளக்கம் வேண்டுமெனில்
கீழ் வரும் வரிகளை காண்க..
சாமம் - சமாதானம் கூறியும்,
இனிய சொற்களைக்
கொண்டு பேசியும்
முயற்சிக்க வேண்டும்.
இது முதல் படிநிலை
தானம் - தானம் கொடுத்து
வழிக்குக் கொண்டு வருதல் -
இது இரண்டாம் படிநிலை
பேதம் - ஒதுக்கி வைத்தல்
அல்லது புறக்கணித்தல்,
மிரட்டுதல் போன்ற முயற்சி
இது மூன்றாவது படிநிலை
தண்டம் - இது அகிம்சைக்
கெதிரான வழி. அதாவது வன்முறையைக் கையாள்வது.
தடி கொண்டு அடிப்பது போன்ற உத்தியைக் கையாள்வது - இது நான்காவது நிலை...
பதவிக்கும் பவிசுக்கும்..
மேற்கண்ட எல்லாமே
நடக்குது உலகிலே..
அல்லாஹ்வின் அருள் தேடி
செல்லும் பள்ளியிலும்
மல்யுத்த போட்டிகள் நடக்குது..
ஆடுகளத்தில் உள்ள வீரர்கள்
அணுகுமுறையை மாற்றினால் சமாதானம் நிலைபெறுமா?
ஊரே ஒன்று கூடி
வீரர்களை மாற்றினால்
சமாதானம் நிலைபெறுமா??
அறிந்தவர்கள்
சொல்லுங்களேன்...
Friday, 10 May 2024
ஆணைகள் அறிவிப்புகள் அணிவகுத்து வருது...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment